தாய்தடை என்றேன் பின்னர்த் தாரமே தடைஎன் றேன்நான் சேய்தடை என்றேன் இந்தச் சிறுதடை எல்லாந் தீர்ந்தும் தோய்தடைச் சிறியேன் இன்னுந் துறந்திலேன் எனைத் தடுக்க ஏய்தடை யாதோ எந்தாய் என்செய்கேன் என்செய் கேனே எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்