தார்த்தட முலையார் நான்பல ரொடுஞ்சார் தலத்திலே வந்தபோ தவரைப் பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன் தவசுப் பாதகப் பூனைபோல் இருந்தேன் பேர்த்துநான் தனித்த போதுபோய் வலிந்து பேசினேன் வஞ்சரிற் பெரியேன் நார்த்திடர் உளத்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே