தாலவாழ்க் கையிலே சார்ந்தவர் எல்லாம் தக்கமுப் போதினும் தனித்தே சீலமார் பூசைக் கடன்முடிக் கின்றார் சிறியனேன் தவஞ்செய்வான் போலே ஞாலமே லவர்க்குக் காட்டிநான் தனித்தே நவிலும்இந் நாய்வயிற் றினுக்கே காலையா தியமுப் போதினும் சோற்றுக் கடன்முடித் திருந்தனன் எந்தாய்