தாழாத துன்பச் சமுத்திரத் தேஇத் தனிஅடியேன் வீழாத வண்ணம் கருணைசெய் வாய்என்னை வேண்டிஅந்நாள் ஊழாம் வினைதவிர்த் தாண்டனை யேஎன் உடையவனே வாழா வகைஎனை இந்நாள் விடுத்தல் வழக்கலவே