தாழாதெனை ஆட்கொண் டருளிய தந்தையேநின் கேழார்மணி அம்பலம் போற்றக் கிடைத்துளேன்நான் ஏழாநிலை மேல்நிலை ஏறி இலங்குகின்றேன் ஊழால்வந்த துன்பங்கள் யாவும் ஒழிந்ததன்றே