தாழும் கொடிய மடவியர்தம் சழக்கால் உழலாத் தகைஅடைந்தே ஆழும் பரமா னந்தவெள்ளத் தழுந்திக் களிக்கும் படிவாய்ப்ப ஊழ்உந் தியசீர் அன்பர்மனத் தொளிரும் சுடரே உயர்தணிகை வாழும் பொருளே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே