தாழ்குழலீர் எனைச்சற்றே தனிக்கவிட்டால் எனது தலைவரைக்காண் குவல்என்றேன் அதனாலோ அன்றி ஏழ்கடலிற் பெரிதன்றோ நான்பெற்ற இன்பம் என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் கூழ்கொதிப்ப தெனக்கொதித்தாள் பாங்கிஎனை வளர்த்த கோதைமருண் டாடுகின்ற பேதைஎனல் ஆனாள் சூழ்மடந்தை மார்களெலாம் தூற்றிநகைக் கின்றார் சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே