தாழ்குழல்நீ ஆண்மகன்போல் நாணம்அச்சம் விடுத்தே சபைக்கேறு கின்றாய்என் றுரைக்கின்றாய் தோழி வாழ்வகைஎன் கணவர்தமைப் புறத்தணைந்தாள் ஒருத்தி மால்எனும்பேர் உடையாள்ஓர் வளைஆழிப் படையாள் ஆழ்கடலில் துயில்கின்றாள் மாமணிமண் டபத்தே ஆள்கின்றாள் ஆண்மகனாய் அறிந்திலையோ அவரைக் கேழ்வகையில் அகம்புணர்ந்தேன் அவர்கருணை அமுதம் கிடைத்ததுநான் ஆண்மகனா கின்றததி சயமோ