தாழ்விக்கும் வஞ்சச் சகமால் ஒழித்தென்னை வாழ்விக்கும் நல்ல மருந்தென்கோ - வீழ்விக்கும் ஈங்கான மாயை இகந்தோர்க் கருள்வோய்நின் பாங்கான செம்பொற் பதம்