தாவியே இயமன் தமர்வரும் அந்நாள் சம்புநின் திருவருள் அடையாப் பாவியேன் செய்வ தென்என நெஞ்சம் பதைபதைத் துருகுகின் றனன்காண் கூவியே எனக்குன் அருள்தரின் அல்லால் கொடியனேன் உய்வகை அறியேன் வாவிஏர் பெறப்பூஞ் சோலைசூழ்ந் தோங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே