தாவு மான்எனக் குதித்துக்கொண் டோ டித் தைய லார்முலைத் தடம்படுங் கடையேன் கூவு காக்கைக்குச் சோற்றில்ஓர் பொருக்கும் கொடுக்க நேர்ந்திடாக் கொடியரில் கொடியேன் ஓவு றாதுழல் ஈஎனப் பலகால் ஓடி ஓடியே தேடுறும் தொழிலேன் சாவு றாவகைக் கென்செயக் கடவேன் தந்தை யேஎனைத் தாங்கிக்கொண் டருளே