தாவென் றருளு மொற்றியுளீர் தமியேன் மோக தாகமற வாவென் றுரைப்பீ ரென்றேன்பின் வருமவ் வெழுத்திங் கிலையென்றார் ஓவென் றுயர்தீர்த் தருளுவதீ தோவென் றேன்பொய் யுரைக்கின்றாய் ஆவென் றுரைத்தா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே
தாவென் றருளு மொற்றியுளீர் தமியேன் மோக தாகமற வாவென் றருள்வீ ரென்றேனவ் வாவின் பின்னர் வருமெழுத்தை மேவென் றதனிற் சேர்த்ததிங்கே மேவி னன்றோ வாவென்பே னேவென் றிடுகண் ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ