திக்கு மாறினும் எழுகடல் புவிமேல் சென்று மாறினும் சேண்விளங் கொளிகள் உக்கு மாறினும் பெயல்இன்றி உலகில் உணவு மாறினும் புவிகளோர் ஏழும் மிக்கு மாறினும் அண்டங்கள் எல்லாம் விழுந்து மாறினும் வேதங்கள் உணரா நக்கன் எம்பிரான் அருள்திருப் பெயராம் நமச்சி வாயத்தை நான்மற வேனே