திசையறிய மாட்டாதே திகைத்தசிறி யேனைத் தெளிவித்து மணிமாடத் திருத்தவிசில் ஏற்றி நசைஅறியா நற்றவரும் மற்றவருஞ் சூழ்ந்து நயப்பஅருட் சிவநிலையை நாட்டவைத்த பதியே வசையறியாப் பெருவாழ்வே மயல்அறியா அறிவே வான்நடுவே இன்பவடி வாய்இருந்த பொருளே பசைஅறியா மனத்தவர்க்கும் பசைஅறிவித் தருளப் பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே