திடனான் மறையார் திருஒற்றித் தியாகர் அவர்தம் பவனிதனை மடனா மகன்று காணவந்தால் மலர்க்கை வளைக ளினைக்கவர்ந்து படனா கணியர் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம் உடனா ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே