திடுக்கற எனைத்தான் வளர்த்திடப் பரையாம் செவிலிபாற் சேர்த்தனை அவளோ எடுக்கவும் நினையாள் படுக்கவும் ஒட்டாள் என்செய்வேன் இன்னும்என் னிடைப்பால் மடுக்கநற் றாயும் வந்திலள் நீயும் வந்தெனைப் பார்த்திலை அந்தோ தடுக்கருங் கருணைத் தந்தையே தளர்ந்தேன் தனையனேன் தளர்ந்திடல் அழகோ