Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2050
திண்ணம் அறியாச் சிறியேன் உளத்திருக்கும்
எண்ணம் அறிந்தாய் இரங்குகிலாய் - அண்ணலுன்பால்
நித்தம் இரங்காஎன் நெஞ்சமர்ந்த தாலோநின்
சித்தம் இரங்காச் செயல்
பாடல் எண் :3625
திண்ணம் பழுத்த சிந்தையிலே தித்தித் துலவாச் சுயஞ்சோதி 
வண்ணம் பழுத்த தனிப்பழமே மன்றில் விளங்கு மணிச்சுடரே 
தண்ணம் பழுத்த மதிஅமுதே தருவாய் இதுவே தருணம்என்றன் 
எண்ணம் பழுத்த தினிச்சிறியேன் இறையுந் தரியேன் தரியேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.