திண்மையே முதலைங் குணக்கரு வாய செல்வமே நல்வழி காட்டும் கண்மையே கண்மை கலந்தஎன் கண்ணே கண்ணுற இயைந்தநற் கருத்தே உண்மையே எல்லாம் உடையஓர் தலைமை ஒருதனித் தெய்வமே உலவா வண்மையே என்றேன் வந்தருட் சோதி வழங்கினை வாழிநின் மாண்பே