தினந்தோறும் உள்ளுருகிச் சீர்பாடும் அன்பர் மனந்தோறும் ஓங்கும் மணியை - இனந்தோறும் வேதமலர் கின்ற வியன்பொழில்சூழ் ஒற்றிநகர்ப் போத மலரைநெஞ்சே போற்று