திரப்படுவேன் மைல்புரி மாய வாழ்வில் தியங்குவேன் சிறிதேனும் தெளிபொன் றில்லேன் மரப்படுவேன் சிதடருடன் திரிவேன் வீணே மங்கையர்தம் கண்கள்எனும் வலைக்குள் வீழ்வேன் கரப்பவர்க்கு முற்படுவேன் கருணை இல்லேன் கண்அனையாய் நின்தணிகை மலையைக் காணேன் இரப்பவர்க்கோர் அணுவளவும் ஈயேன் பேயேன் ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே