திரிபிலாப் பொருளே திருச்சிற்றம் பலத்தே திகழ்கின்ற தெய்வமே அன்பர் பரிவுறுந் தோறும் விரைந்துவந் தருளும் பண்பனே பரையிடப் பாகா பெரியபொற் சபையில் நடம்புரி கின்ற பேரருட் சோதியே எனக்கே உரியநல் தந்தை வள்ளலே அடியேன் உரைக்கின்றேன் கேட்டருள் இதுவே