திருஉருக்கொண் டெழுந்தருளிச் சிறியேன்முன் அடைந்து திருநீற்றுப் பைஅவிழ்த்துச் செஞ்சுடர்ப்பூ அளிக்கத் தருவுருக்கொண் டெதிர்வணங்கி வாங்கியநான் மீட்டும் தயாநிதியே திருநீறும் தருகஎனக் கேட்ப மருவுருக்கொண் டன்றளித்தாம் திருநீறின் றுனக்கு மகிழ்ந்தளித்தாம் இவைஎன்று வாய்மலர்ந்து நின்றாய் குருஉருக்கொண் டம்பலத்தே அருள்நடனம் புரியும் குருமணியே என்னைமுன்னாட் கொண்டகுணக் குன்றே