திருஎலாம் தரும்ஓர் தெய்வமாம் ஒருவன் திருச்சிற்றம் பலந்திகழ் கின்றான் உருஎலாம் உணர்ச்சி உடல்பொருள் ஆவி உளஎலாம் ஆங்கவன் தனக்கே தெருஎலாம் அறியக் கொடுத்தனன் வேறு செயலிலேன் எனநினைத் திருந்தேன் அருஎலாம் உடையாய் நீஅறிந் ததுவே அடிக்கடி உரைப்பதென் நினக்கே