திருக்கண் நுதலால் திருமகனைத் தீர்த்தார் ஒற்றித் தேவர்அவர் எருக்க மலரே சூடுவர்நீ எழில்மல் லிகைஎன் றெண்ணினையால் உருக்கும் நெருப்பே அவர்உருவம் உனக்கும் அவர்க்கும் உறவாமோ இருக்க மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே