திருத்தகுவே தாந்தமொடு சித்தாந்த முதலாத் திகழ்கின்ற அந்தமெலாம் தேடியுங்கண் டறியா ஒருத்தனைஉள் ளொளியைஒளிர் உள்ளொளிக்குள் ஒளியை உள்ளபடி உள்ளவனை உடையபெருந் தகையை நிருத்தனைமெய்ப் பொருளான நின்மலனைச் சிவனை நித்தியனைச் சத்தியனை நிற்குணனை எனது கருத்தனைச்சிற் சபையோங்கு கடவுளைஎன் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே