திருத்தம் பயின்றார் கடல்நஞ் சயின்றார் நினைவார் தங்கள் நெறிக்கேற்க அருத்தம் பகர்வார் அருமைப் புதல்வர் அறுமா முகனார் அயில்வேலார் திருத்தம் பெறுவார் புகழும் தணிகைத் திருமா மலையார் ஒருமாதின் வருத்தம் பாரார் வளையும் தாரார் வாரார் அவர்தம் மனம்என்னே