திருநாள் நினைத்தொழும் நன்னாள் தொழாமல் செலுத்தியநாள் கருநாள் எனமறை எல்லாம் புகலும் கருத்தறிந்தே ஒருநா ளினுநின் றனைமற வார்அன்பர் ஒற்றியில்வாழ் மருநாண் மலர்க்குழல் மானே வடிவுடை மாணிக்கமே