திருநி லைத்துநல் அருளொடும் அன்பொடும் சிறப்பொடும் செழித்தோங்க உருநி லைத்திவண் மகிழ்வொடு வாழ்வுற உவந்துநின் அருள்செய்வாய் இருநி லத்தவர் இன்புறத் திருவருள் இயல்வடி வொடுமன்றில் குருநி லைத்தசற் குருஎனும் இறைவநின் குரைகழற் பதம்போற்றி