திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச் சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல் பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப் பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர் கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே