திருநெறிசேர் மெய்அடியர் திறன்ஒன்றும் அறியேன் செறிவறியேன் அறிவறியேன் செய்வகையை அறியேன் கருநெறிசேர்ந் துழல்கின்ற கடையரினுங் கடையேன் கற்கின்றேன் சாகாத கல்விநிலை காணேன் பெருநெறிசேர் மெய்ஞ்ஞான சித்திநிலை பெறுவான் பிதற்றுகின்றேன் அதற்குரிய பெற்றியிலேன் அந்தோ வருநெறியில் என்னைவலிந் தாட்கொண்ட மணியே மன்றுடைய பெருவாழ்வே வழங்குகநின் அருளே