திருந்தும்என் உள்ளத் திருக்கோயில் ஞான சித்தி புரம்எனச் சத்தியம் கண்டேன் இருந்தருள் கின்றநீர் என்னிரு கண்கள் இன்புற அன்றுவந் தெழில்உருக் காட்டி வருந்தலை என்றெனைத் தேற்றிய வாறே வள்ளலே இன்றுநும் வரவுகண் டல்லால் அருந்தவர் நேரினும் பொருந்தவும் மாட்டேன் அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே