திருப்பொதுவில் திருநடம்நான் சென்றுகண்ட தருணம் சித்திஎனும் பெண்ணரசி எத்திஎன்கை பிடித்தாள் கருப்பறியா தெனைஅதன்முன் கலந்தபுத்தி எனும்ஓர் காரிகைதான் கண்டளவில் கனிந்துமகிழ்ந் திடுமோ விருப்பமுறா தெனைமுனிந்து விடுத்திடுமோ நேயம் விளைந்திடுமோ இவர்க்குநிதம் சண்டைவிளைந் திடுமோ தருப்பொதுவில் இருவர்க்கும் சந்ததிஉண் டாமோ தடைபடுமோ திருஉளந்தான் சற்றும்அறிந் திலனே