திருமகள்எம் பெருமாட்டி மகிழும் வண்ணச் செழுங்கனியே கொழும்பாகே தேனே தெய்வத் தருமகனைக் காத்தருளக் கரத்தே வென்றித் தனுஎடுத்த ஒருமுதலே தருமப் பேறே இருமையும்என் னுளத்தமர்ந்த ராம நாமத் தென்அரசே என்அமுதே என்தா யேநின் மருமலர்ப்பொன் அடிவழுத்தும் சிறியேன் அந்தோ மனந்தளர்ந்தேன் அறிந்தும்அருள் வழங்கி லாயே