திருமணிப் பொதுவில் ஒருபெரும் பதிஎன் சிந்தையில் கலந்தனன் என்றாள் பெருமையில் சிறந்தேன் என்பெருந் தவத்தைப் பேசுதல் அரிதரி தென்றாள் இருமையும் என்போல் ஒருமையில் பெற்றார் யாண்டுளர் யாண்டுளர் என்றாள் மருமலர் முகத்தே இளநகை துளும்ப வயங்கினாள் நான்பெற்ற மகளே