திருவருடுந் திருவடிப்பொற் சிலம்பசைய நடந்தென் சிந்தையிலே புகுந்துநின்பாற் சேர்ந்துகலந் திருந்தாள் தெருமரலற் றுயர்ந்தமறைச் சிரத்தமர்ந்த புனிதை சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப் பொருவருமெய் யன்புடையார் இருவருங்கண் டுவந்து போற்றமணிப் பொதுவில்நடம் புரிகின்ற துரையே பருவரல்அற் றடிச்சிறியேன் பெருவரம்பெற் றுனையே பாடுகின்றேன் பெரியஅருட் பருவமடைந் தனனே