திருவளர்பே ரருளுடையான் சிற்சபையான் எல்லாம் செய்யவல்ல தனித்தலைமைச் சித்தன்எல்லாம் உடையான் உருவமுமாய் அருவமுமாய் உபயமுமாய் அலவாய் ஓங்கும் அருட்பெருஞ்ஸோதி ஒருவனுண்டே அவன்றான் பெருமையினால் எனையீன்றான் நான்ஒருவன் தானே பிள்ளைஅவன் பிள்ளைஎனப் பெரியர்எலாம் அறிவார் இருமையுறு தத்துவர்காள் என்னைஅறி யீரோ ஈங்குமது துள்ளல்எலாம் ஏதும்நட வாதே