திருவாத வூரெம் பெருமான் பொருட்டன்று தென்னன்முன்னே வெருவாத வைதிகப் பாய்பரி மேற்கொண்டு மேவிநின்ற ஒருவாத கோலத் தொருவாஅக் கோலத்தை உள்குளிர்ந்தே கருவாத நீங்கிடக் காட்டுகண் டாய்என் கனவினிலே