பாடல் எண் :4460
திருவாளர் போற்ற என்னோ டாடவா ரீர்
திருவனையார் வாழ்த்தஇங்கே ஆடவா ரீர்
பெருவாய்மைப் பெருந்தகையீர் ஆடவா ரீர்
பேராசை பொங்குகின்றேன் ஆடவா ரீர்
உருவாகி ஓங்குகின்றீர் ஆடவா ரீர்
உத்தமரே இதுதருணம் ஆடவா ரீர்
இருவாணர் ஏத்தநின்றீர் ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர் ஆடவா ரீர்
பாடல் எண் :5625
திருவாளர் கனகசபைத் திருநடஞ்செய் தருள்வார்
தேவர்சிகா மணிஎனக்குத் திருமாலை கொடுத்தார்
உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்
ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
பெருவாய்மைத் திறம்சிறிதும் பேசமுடி யாதே
பேசுவதார் மறைகள்எலாம் கூசுகின்ற என்றால்
துருவாமல் இங்கெனக்குக் கிடைத்ததைஎன் சொல்வேன்
சொல்அளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி
பாடல் எண் :5747
திருவாளர் பொற்சபையில் திருநடஞ்செய் தருள்வார்
சிற்சபையார் என்தனக்குத் திருமாலை கொடுத்தார்
உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்
ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
பெருவாய்மைத் திருவருளே பெருவாழ்வென் றுணர்ந்தோர்
பேசியமெய் வாசகத்தின் பெருமையைஇன் றுணர்ந்தேன்
துருவாத எனக்கிங்கே அருள்நினைக்கும் தோறும்
சொல்லளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.