திருவே திகழுங் கலைமகளே திருவே மலையான் திருமகளே உருவே இச்சை மயமேமெய் உணர்வின் வணமே உயர்இன்பக் குருவே ஆதித் தனித்தாயே குலவும் பரையாம் பெருந்தாயே மருவே மலரே சிவகாம வல்லி மணியே வந்தருளே
திருவே தெள்ளமு தே - அருட் - சித்த சிகாமணி யே கருவே ரற்றிட வே - களை - கின்றவென் கண்ணுத லே மருவே மாமல ரே - மலர் - வாழ்கின்ற வானவ னாம் உருவே என்குரு வே - எனக் - குண்மை உரைத்தரு ளே