திருவை யளிக்குந் திருவொற்றித் தேவ ரீர்க்கென் விழைவென்றேன் வெருவ லுனது பெயரிடையோர் மெய்நீக் கியநின் முகமென்றார் தருவ லதனை வெளிப்படையாற் சாற்று மென்றேன் சாற்றுவனே லிருவை மடவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ