திரைகண்ட மாயைக் கடல்கடந் தேன்அருட் சீர்விளங்கும் கரைகண் டடைந்தனன் அக்கரை மேல்சர்க் கரைகலந்த உரைகண்ட தெள்ளமு துண்டேன் அருளொளி ஓங்குகின்ற வரைகண்ட தன்மிசை உற்றேன் உலகம் மதித்திடவே