திரைசேர் மறைப்பைத் தீர்த்தெனக்கே தெரியா வெல்லாந் தெரிவித்துப் பரைசேர் ஞானப் பெருவெளியில் பழுத்த கொழுத்த பழந்தந்தே கரைசேர் இன்பக் காட்சிஎலாம் காட்டிக் கொடுத்தே எனையாண்ட அரைசே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே