திரையார் ஓதை ஒற்றியில்வாழ் தியாக ரவர்தம் பவனிதனைக் கரையா மகிழ்விற் காணவந்தால் கற்பின் நலத்தைக் கவர்ந்துகொண்டு பரையா தரிக்க நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம் உரையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே