திறப்படநன் குணராதே திருவருளோ டூடித் தீமைபுகன் றேன்கருணைத் திறஞ்சிறிதுந் தெளியேன் புறப்படிறேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும் பூதமுதல் நாதவரைப் புணருவித்த புனிதா உறப்படுமெய் உணர்வுடையார் உள்ளகத்தே விளங்கும் உண்மையறி வானந்த உருவுடைய குருவே சிறப்படைமா தவர்போற்றச் செம்பொன்மணிப் பொதுவில் திருத்தொழில்ஐந் தியற்றுவிக்குந் திருநடநா யகனே