தில்லையிடை மேவும்எங்கள் செல்வப் பெருவாழ்வே ஒல்லைஅடி யார்க்கருளும் ஒற்றியூர் உத்தமனே அல்லை நிகர்க்கும் அளகத்தார் ஆசைதனக் கெல்லைஅறி யாதஇந்த ஏழைமுகம் பாராயோ