தீக்குணத்தார் யாவருமென் சீடரெனில் என்னுடைய தீக்குணத்தின் எல்லைஎவர் தேர்கிற்பார் - ஊக்கமிகு நல்லோர்க் களிக்கு நதிச்சடையோய் எற்கருளில் எல்லோர்க்கும் ஐயுறவா மே