தீங்கு நெஞ்சினேன் வேங்கையை அனையேன் தீய மாதர்தம் திறத்துழல் கின்றேன் பாங்கி லாரொடும் பழகிய வெறியேன் பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன் தெங்கு கங்கையைச் செஞ்சடை இருத்தும் சிவபி ரான்செல்வத் திருஅருட் பேறே ஓங்கு நல்தணி காசலத் தமர்ந்த உண்மை யேஎனக் குற்றிடும் துணையே