தீதறிவேன் நன்கணுவும் செய்யேன்வீண் நாள்போக்கும் வாதறிவேன் வஞ்சகனேன் வல்வினையேன் வாய்மையிலேன் சூதறிவேன் மால்அயனும் சொல்லறிய நின்பெருமை யாதறிவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே