தீதுசெய் தாலும்நின் அன்பர்கள் தம்முன் செருக்கிநின்று வாதுசெய் தாலும்நின் தாள்மறந் தாலும் மதியிலியேன் ஏதுசெய் தாலும் பொறுத்தருள் வாய்ஒற்றி யின்னிடைப்பூ மாதுசெய் தாழ்குழல் மானே வடிவுடை மாணிக்கமே
தீதுசெய் தேற்கருள் செய்வான்நின் சித்தம் திரும்பிலையேல் தாதுசெய் தேகத்து ணாஒரு போது தவிர்ந்தநினக் கேதுசெய் தான்சிவன் என்றே உலகர் இழிவுரைத்தால் யாதுசெய் வேன்தெய்வ மேஎளி யேன்உயிர்க் கின்னமுதே ,,,