தீமைஎலாம் நன்மைஎன்றே திருஉளங்கொண் டருளிச் சிறியேனுக் கருளமுதத் தெளிவளித்த திறத்தை ஆமயந்தீர்த் தியற்கைஇன்ப அனுபவமே மயமாய் அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்சோ தியைஓர் ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த ஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை நாமருவி இறவாத நலம்பெறலாம் உலகீர் நல்லஒரு தருணம்இது வல்லைவம்மின் நீரே